Friday 21 December, 2012

இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (12) தவிட்டுக் குருவி


இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் : (12) தவிட்டுக் குருவி



சாம்பல் நிறத்தில் மைனா அளவில் இருக்கும் தவிட்டுக் குருவியை நமது தோட்டங்களில் காண முடியும். ஒன்று இரண்டாக அல்ல, ஏழெட்டு குருவிகள் அடங்கிய ஒரு கும்பலாக  எங்கிருந்தோ திடீரென வந்திறங்கித் தரையில் கிடக்கும் இலை சரகுகளைத் தள்ளி அதனடியில் கிடைக்கும் புழு பூசிகளை உண்ணும்.  அப்போது இப்பறவைகள், கீச்..மூச்”…“கீச்..முச்”, என்று பலமாக குரல் எழுப்பும், எல்லாக் குருவிகளுமாக ஒரே சமயத்தில்.  அதனால் தான் இந்தக் குருவியின் ஒரு ஆங்கிலப் பெயர் ‘Babbler’  என்பதாகும்.  பேப்ளிங் என்றால் பொருள் புரியா வண்ணம் கூச்சல் எழுப்புவது.  விஞ்ஞான ரீதியான் பெயர் Turdoides caudatus என்பது.
பார்ப்பதற்கு ஒன்றும் அழகற்ற நிறத்தில் இருக்கும் இந்தக் குருவியின் முட்டைகளின் நிறம் என்ன தெரியுமா?  நாம் திருடிச் சென்று விடலாமா என்று நினைக்கும் அளவிற்கு அழகான நீலப் பச்சை நிறம் !

              “..என்ன அழகு?  திருடிச் செல்வோமா?...”
                         (http://i159.photobucket.com/albums/t123/amyl65/eggs0512.jpg)

தவிட்டுக் குருவியின் மற்றொரு ஆங்கிலப் பெயர் ‘Seven sisters’ என்பதுஇதுவும் காரணப் பெயரேகாரணம் என்னவென்று பாருங்கள்.  ஒரு பறவை கூடு கட்டி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்து இருந்தால் குஞ்சுகளின் சித்தப்பா, சித்தி, மாமா, மாமி என எல்லொருமாக குஞ்சுகளுக்கு இரை கொண்டு வந்து கொடுப்பார்கள்.  ஏழு சகோதரிகள் என்று பெயர் வந்த காரணம் இப்போது புரிகிறதா ?
                                                                                                                     
நாம் அவனைக் கண்டு களிக்க எத்தனை காட்சிகளை இயற்கையின் எழிலில் நமக்கு அளிக்கிறான் இறைவன் பார்த்தீர்களா ?

(படங்கள் இணைய தளங்களில் இருந்து)

                                            நடராஜன் கல்பட்டு                                                                                            

                                                                                                                                                                   

2 comments:

  1. இப்போது தலைப்பு வந்துவிட்டது ஐயா, இன்னும் லேபல்கள் சேர்க்கவில்லை. அதையும் கொஞ்சம் கவனியுங்கள்.

    ReplyDelete
  2. இங்கே தினம் தினம் நான் காக்கைக்கு வைக்கும் சாதத்தைத் தின்ன வருகிறது. காலம்பர வாக்கிங் போறச்சே கூடவே அதுவும் பறந்து வந்து கலந்து கொள்ளும். :)))))

    ReplyDelete